Skip to main content

தி.மு.க., அ.தி.மு.க. நிர்வாகிகள் வீடுகளில் திடீர் சோதனை!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

DMK , ADMK LEADERS HOMES RAID FLYIND SQUAD TEAM

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பணிகளில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பல சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவினர் ஒரு வாக்காளருக்கு ஆயிரம் ரூபாயும், சில சட்டமன்றத் தொகுதிகளில் ஐநூறு ரூபாயும் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் விராலிமலை, ஒரத்தநாடு போன்ற முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ரூபாய் 2000 வரை வழங்கி வருவதாகக் கூறுகிறார்கள். மேலும், திமுக வேட்பாளர்கள் சராசரியாக தலா ரூபாய் 500 வரை கொடுப்பதாக தகவல் கூறுகின்றனர். 

 

நேற்று (02/04/2021) கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாமலை பகுதியில், அதிமுகவினர் பணத்துடன் கூடிய கவர்களை வழங்குவதாக வந்த தகவலையடுத்து, பறக்கும் படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். அவர்களைப் பார்த்த அதிமுகவினர் கவர்களைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அந்தக் கவர்களைக் கைப்பற்றிப் பார்த்தபோது, ஒவ்வொரு கவரிலும் ரூ.1000, 2000, 3000 என மொத்தம் ரூபாய் 41,000 வரை இருந்துள்ளதைப் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

DMK , ADMK LEADERS HOMES RAID FLYIND SQUAD TEAM

 

இதேபோல மாவட்டம் முழுவதும் பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல்கள் வர, மாவட்ட அதிகாரிகளின் உத்தரவில், இன்று (03/04/2021) காலை திருமயம் தொகுதியில் உள்ள வி.கோட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராமதிலகம் (திமுக) வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை செய்துள்ளனர். அதேபோல, ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தரப்பில் இருந்து நேற்று (02/04/2021) இரவு அரயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் பணம் வாங்கிச் சென்றதாக அவர்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கிய பட்டியல் கிடைத்ததால், அந்த ஏழு பேர் வீடுகளிலும் ஆலங்குடி டி.எஸ்.பி. முத்துராஜா தலைமையிலான காவல்துறையினரின் பாதுகாப்புடன் பறக்கும் படை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இருப்பினும் யார் வீட்டிலும் பணம் சிக்கவில்லை. இதேபோல தொடர்ந்து சோதனைகள் நடந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்