Skip to main content

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு!

Published on 07/12/2017 | Edited on 07/12/2017
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு!



தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கவும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பொதுக்குழுவை நடத்தவும் உத்தரவிடக்கோரி தயாரிப்பாளர்கள் கிஷோர், வடிவேல் உள்ளிட்ட மூன்று தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். 

சங்க தேர்தலில் உறுப்பினர்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் சங்க துணைவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறைந்தது மூன்று படங்கள் தயாரித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற புதிய விதியை நடைமுறைபடுத்த உள்ளதாகவும், அப்படி தீர்மானம் நிறைவேற்றினால் தயாரிப்பாளர்களின் நலன் பாதிக்கப்படும் என்பதால் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து பொதுக்குழுவை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஞாயிற்றுக்கிழமை பொதுக்குழுவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். ஆனால் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்