
தனியார் பேருந்தும் ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்கள் பேருந்துக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மகாராஜபுரம் அரசு குடியிருப்பு அருகே வந்தது. அப்போது திடீரென எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுநர் பலியாகினர். இதனால் அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநரின் உறவினர்கள், நண்பர்கள் ஒன்றிணைந்து அந்த பேருந்தைச் சிறைபிடித்தனர். கற்களை எடுத்து பேருந்து கண்ணாடிகளை உடைத்ததோடு பேருந்துக்கு தீ வைத்தனர். இதனால் பேருந்திலிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதை அறிந்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்தபோது உறவினர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.