Published on 02/08/2021 | Edited on 02/08/2021

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் படத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலைஞரின் திருவுருவப் படத்தை சட்டப்பேரவையில் இன்று திறந்து வைத்தார்.
விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் உரையாற்றினர். அதிமுக இந்நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது. பாஜக சார்பாக அண்ணாமலை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.