Skip to main content

பாலியல் தொந்தரவை தடுக்க தபால் அட்டை;திருவாரூர் மாவட்ட எஸ்.பி அறிமுகம்!!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளை தடுத்திடும் விதமாக பள்ளி மாணவிகளுக்கு தபால் அட்டைகளை வழங்கினார் திருவாரூர் மாவட்ட எஸ்.பி  விக்ரமன்.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறையினர் சார்பில் பாலியல் தொந்தரவுகளிலிருந்து பெண்களை காப்பாற்றும் நோக்கும் தபால் அட்டைகள் வழங்கும் புதிய முறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் தொடங்கி வைத்தார்.

 

sp

 

அவர் மேலும் கூறுகையில் ". இந்த திட்டத்தின் மூலம் பள்ளி மாணவிகள் மட்டுமின்றி அவர்கள் கண்களுக்கும், காதுகளுக்கு எட்டும் பாலியல் தொந்தரவுகள் குறித்து தகவல்களை இந்த முகவரி எழுதப்பட்ட தபால் அட்டை மூலமாக தகவல்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி அது எங்களுக்கு கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும். இந்த திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு எதிரான செயல்கள் மற்றும் குற்றங்கள் தடுக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது, இத்திட்டம் மாவட்ட முழுவதும் செயல்படுத்தப்படும் ". என விக்ரமன் எஸ்.பி தொிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

 

இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி தொடங்கும் நேரங்களிலும், முடியும் நேரங்களிலும் காவல்துறையினர் பள்ளி வளாகத்தின் அருகில் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; ரயில் முன் தள்ளிவிட்ட இளைஞர்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 Sexual harassment of a child girl in uttar pradesh

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில், தன்னை பாலியல் வன்கொடுமையில் இருந்து காத்துக் கொள்வதற்காக ஓடிய சிறுமியை ரயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்ய முயன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்து தொழில்முறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு அந்த சிறுமி தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

 

அப்போது விஜய் மெளரியா என்ற நபர், அந்தச் சிறுமியைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமியை இடைமறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்க முயற்சி செய்தார். இதில் அதிர்ச்சியடைந்த சிறுமி, செய்வதறியாது அங்கிருந்து தப்பி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி ஓடிச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியைப் பின் தொடர்ந்த விஜய் மெளரியா, ரயிலில் தள்ளிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வழியாக வந்த ரயில், சிறுமி மீது மோதியுள்ளது. இதில், அந்த சிறுமியின் ஒரு கையும், இரு கால்களும் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தார். 

 

உடனே அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விஜய் மெளரியா மீது போக்ஸோ சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

மாநிலத்தை விட்டு ஆளுநர் வெளியேற அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் (படங்கள்)

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் இன்று (25.01.2023) காலை அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாநிலத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, ‘இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளை உயர்த்தி பிடிப்போம்’, ‘ஆர்எஸ்எஸ் - பாஜக; அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்’ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.