Skip to main content

நேர்மை தவறிய பெண் கலெக்டர் பல்லவி!  நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த  சஸ்பெண்ட்!!

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
paa


 தேனி  மாவட்டத்தில் அங்கன்வாடி உதவியாளர்கள், குறு அங்கன்வாடி
உதவியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் என 720  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விண்ணப்பங்களை  அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் விண்ணப்பித்து இருந்தனர். 
   இப்படி மாவட்டத்தில் உள்ள  எட்டு வட்டாரங்களில் இருந்து வரப்பட்ட  விண்ணப்பங்களை ஆய்வு செய்தனர். 
அதன்பின் எட்டு வட்டாரங்களில் உள்ள பணியிடங்களுக்கான நேர்முக தேர்வும்  
நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பணி நியமனமும்  
வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பணியிடம் கிடைக்காத  பலர் மாவட்ட  அலுவலகத்தில் ஒரு புறம் மனு கொடுத்தும் வருகிறார்கள்.
     

    இந்த நிலையில் தான் கம்பம் வட்டாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குறிப்பிட்டதை மட்டும் ஒயிட் மார்க் வைத்து முறைகேடாக மாவட்ட நிர்வாகத்திற்கு  அனுப்பியதாக கம்பத்தில் உள்ள  குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி மீது புகார் வந்தது.  அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விசாரணைக்கு உத்தரவிட்டார். 

 

அந்த  விசாரணையில் விஜயலட்சுமி தான் விண்ணப்பங்களில் முறைகேடு  செய்து இருக்கிறார் என தெரியவந்ததின் பேரில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்  அந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரியான விஜயலட்சுமியை அதிரடியாக  (சஸ்பெ ண்ட் )தற்காலிக பணி நீக்கம் செய்தார்.  அதோடு அந்த  அலுவலகத்தில் உள்ள அலுவலர்களிடமும்  விசாரணை நடத்த கலெக்டர்  உத்தரவிட்டுள்ளார். 
  

  மாவட்ட கலெக்டர்  பல்லவி பல்தேவ் ஒரு நேர்மையான கலெக்டர். மாவட்டத்தில் பொறுப்பு ஏற்று ஆறு மாதத்திலேயே பல அதிரடி நடவடிக்கை எடுத்து சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தும் நேர்மைக்கு  இலக்கணமாக இருந்து  வந்த கலெக்டர்  இந்த  விசாரணையில் பாதை தவறி விட்டார்.  சரிவர விசாரணை  செய்யாமலேயே ஒரு நேர்மையான பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து விட்டார் என்ற பேச்சு கம்பம்  நகரில் வெளிப்படையாக பேசப்பட்டு வருவதைக்கண்டு நாமும் விசாரணை களத்தில்  இறங்கினோம்.
  

   கம்பம் வட்டாரத்தில் மட்டும்  அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் என 98 இடங்கள் இருக்கிறது. இதற்கு 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதுபோல் எல்லா மாவட்டம் போலவே ஓபிஎஸ் மாவட்டத்தில் உள்ள பொறுப்பில் இருக்கும் கட்சிகாரர்கள் பலர் விண்ணப்பித்த மக்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி இருக்கிறார்கள்.

 

jak


     அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்களை விட கம்பம் சட்டமன்ற உறுப்பினரான
 ஜக்கையன் ஆதரவாளர்கள்  பலர் ஒரு  அங்கன் வாடி பணி நியமனத்திற்கு தலா 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வசூல் பார்த்து இருக்கிறார்கள். இப்படி மக்களிடம் வசூல் பார்த்த விண்ணப்பங்களுக்கு எம்.எல்.ஏ. ஜக்கையனிடம் சொல்லி கலெக்டர் மூலமாக போஸ்டிங் போட  சொல்ல வேண்டும் என்பதற்காக எம்எல்ஏ ஆட்கள் கம்பத்தில் உள்ள வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள சில அலுலர்களை சரி செய்து பணம் வாங்கிய விண்ணப்பங்களுக்கு மட்டும் அடையாளத்திற்காக  ஒயிட் மார்க்  வைத்து இருக்கிறார்கள். இது திட்ட அதிகாரியான விஜயலட்சுமிக்கு தெரியாமலே மாவட்ட அலுவலகமான கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டனர். அதன் பின் தான் கம்பம் வட்டார விண்ணப்பங்களை ஆய்வு செய்த போது தான் ஒயிட் மார்க் அடையாளம் பல விண்ணப்பங்களில் இருப்பது தெரிந்து மாவட்ட கலெக்டர் பல்லவி காதுக்கு கொண்டு போய் இருக்கிறார்கள்.


    இதனால் டென்ஷன் அடைந்த  கலெக்டர் பல்லவி பல்தேவ்  அந்த
வட்டாரத்திற்கு விண்ணப்பித்த மக்களிடம் செல் மூலம் தொடர்பு கொண்டு உங்க பெயர்   என்ன? எந்த சென்டருக்கு விண்ணப்பித்து இருக்கிறீர்கள்.யாரும் பணம் கேட்டார்களா? யாரிடமும் பணம் கொடுத்து இருக்கிறீர்களா? என நான்கு கேள்விகளை கலெக்டர் கேட்டதில் தான் எம்.எல்.ஏ.  ஜக்கையன் ஆட்கள் மூலம் பணம் கொடுத்த விஷயம் கலெக்டர் காதுக்கு போனதின்  பேரில் தான் ஒயிட் மார்க் விஷயமும் கலெக்டருக்கு தெரிந்து இருக்கிறது.


அதன் அடிப்படையில் தான் கம்பம் வட்டாரத்தில் வந்த விண்ணப்பங்களுக்கு மட்டும்  போஸ்டிங் போடாமல் மற்ற வட்டாரங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவிபணியாளருக்கான காலி இடங்களுக்கு தகுதியின் அடிப்படையில்  போஸ்டிங் போட்டு   விட்டு,  திட்ட அதிகாரியான விஜயலட்சுமியை  அதிரடியாக  சஸ்பெண்ட் செய்து  சஸ்பெண்ட் ஆர்டரையும் கோட்டூரில் உள்ள விஜயலட்சுமி வீட்டுக்கே கடந்த 25ம்தேதி போய் கொடுக்க சொல்லி இருக்கிறார் கலெக்டர்.  


       
ஆனால்  உண்மையிலையே இந்த விஷயம் விஜயலட்சுமிக்கு தெரியாது. கீழே உள்ள
அலுவலர்கள் சிலர் செய்த தவறுக்கு விஜயலட்சுமி பலிகடா ஆக்கப்பட்டு இருக்கிறாரே தவிர  யாரிடமும் கை நீட்டமாட்டார். யாரிடமும் சத்தம் போட்டு கூட பேச மாட்டார். அந்த அளவுக்கு  ஒரு நேர்மையான அதிகாரி தற்பொழுது  எம்.எல்.ஏ.  ஜக்கையன் ஆதரவாளர்களின்  சூழ்ச்சிக்கு பலி கடாக்கப்பட்டு இருக்கிறார். அது தெரியாமல் கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் அந்த நேர்மையான அதிகாரிக்கு பரிசாக சஸ்பெண்டை கொடுத்து  பாதை மாறிவிட்டார் என்பது  தான் நமது விசாரணை யிலும் தெரிய வந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேனியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மறுவாக்குப் பதிவு! -கலெக்டர் ஆய்வு!!

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வடுகபட்டி 197 வது வாக்குச்சாவடியில் தேனி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 


இவ்வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குபதிவை அழிக்காமல் தொடர்ந்து வாக்கு பதிவு நடை பெற்றதால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அன்று பதிவான  மொத்தம் ஆண்கள், பெண்கள் உட்பட 1405 வாக்குகள் உள்ள வாக்குச்சாவடியில் 905 வாக்குகளே பதிவாகின. இதனால் 197 வது வாக்குச் சாவடியில் மீண்டும் மறு வாக்குப் பதிவு நடத்திட தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் அறிக்கை அளித்து கேட்டுக் கொண்டதையடுத்து தேர்தல் ஆணையம் பலரிசீலித்து மறு வாக்குப்பதிவு நடத்த உத்திரவிட்டதையடுத்து தொடர்ந்து இந்த வாக்குச் சாவடிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மக்கள் வாக்களிக்க வந்து செல்ல வசதியாகவும், அனைவரும் வந்து வாக்களிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலரும், சட்டமன்ற தேர்தல் அலுவலரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் பார்வையிட்டு, பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டதைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி.சண்முகராகேஸ்வரன் உட்பட நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

 Re polling with heavy police protection in Periyakulam Andipatti

 

இந்நிலையில், இன்று  நடைபெறும் 197 வது வாக்குச்சாவடிக்கு சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிககும் இயந்திரங்கள் மற்றும் கோளாறு ஏற்பட்டால் உடனே மாற்று இயந்திரமும் பொருத்திக் கொள்ள இயந்திரங்கள் கையிருப்பில் பல்வேறு அரசியல் கட்சியினர் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபார்க்கப்படுவாக்குச்சாவடிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. 

 

 

வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் காவல் துறையினரிடம், வாக்களிக்க வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட வாக்காளர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடவும். கழிவறை மற்றும் குடிநீர் வசதிக்ள் போன்ற அத்தியாவசிய தேவைகளைச் செய்திடவும், வாக்காளர்களுக்கு வரி காட்டியாக உதவிடவும், கள்ள வாக்கு பதிய மீண்டும் வருபவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துரை வழங்கினார். 

 

 Re polling with heavy police protection in Periyakulam Andipatti

 

பாரபட்சம் காட்டாமல் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். வடுகபட்டியில் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 21 இடங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட (இராணுவ வீரர்கள் ) உட்பட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்ட்டுள்ளனர். 

 

 

மேலும்   வடுகபட்டியில் 197-வது வாக்குச்  சாவடியில்  வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் ஆடியோவுடன் கூடிய 13 கண்காணிப்பு கேமராக்கள் , 13 துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.


      

 Re polling with heavy police protection in Periyakulam Andipatti

 

அதுபோல் ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள பாலசமுத்திரம் கம்மவார் நடுநிலை பள்ளி மற்றும் ஜி.கல்லுப்பட்டி,பிராதுகாரன்பட்டி வாக்கு சாவடிகளில் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள். இத்தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாக்கு சாவடிகளை பார்வையிட்டு வாக்கள மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

 

 

அதுபோல் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் மறு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் பாலசமுத்திரம் மற்றும் வடுகபட்டி வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆய்வு செய்தும் வருகின்றனர். அதுபோல் போலீசார் பாதுகாப்பும் பலபடத்தப்பட்டு இருப்பதால் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

 

 

 

Next Story

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய ஒபிஎஸ்!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018

துணை முதல்வர்  ஒபிஎஸ்சின் சொந்த  மாவட்டமான தேனி மாவட்டத்தில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது. 

      

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் மழை காற்றுடன் வீசிய கஜா புயல் தேனி மாவட்டத்திலும் வீச தொடங்கியதின் மூலம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி பெரியகுளம் நகரில் உள்ள வரகாநதி ஆறு  நிரம்பி வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டது. பெரியகுளம் நகரில் பல இடங்களில் வெள்ளபெருக்கு  ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் பகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

 

 For people suffering from storm

 

அதுபோல் ஒபிஎஸ் தொகுதியில் உள்ள குரங்கனி, கொட்டகுடி ஆறு நிரம்பியதால் ஆற்று ஓரங்களில் உள்ள பி.சி.பட்டி, தேனி பகுதிகளில் ஆற்று ஓரங்களில் உள்ள மக்களை முன் கூட்டியே தேனி நகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அப்படி  இருந்தும் அந்த மக்கள் குடியிருந்த வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அது போல் ஜவகர் தெரு உள்பட சில பகுதிகளிலும் உள்ள  வீடுகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. அதுபோல் போடி நகரிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள்பெரிதும்  பாதிக்கப்பட்டனர்.

   

 For people suffering from storm

 

இப்படி கஜாபுயல் மூலம் ஒபிஎஸ்சின் சொந்த  ஊர் மக்களும், தொகுதி மக்களும் பெரிதும் பாதிகப்பட்டனர் என்ற விஷயம் ஒபிஎஸ் காதுக்கு எட்ட உடனே தேனிக்கு வந்த ஓபிஎஸ் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட்டு உடனே பெரியகுளம் சென்று பார்வையிட்டார். அப்பொழுது  சிறு வயதில் தன் தம்பி ராஜாவுடன்  தென்கரை, வடகரைக்கு நடுவே ஓடக்கூடிய வரகாநதி ஆற்றில்தான் குளிப்பார்களாலாம்.  அப்படிப்பட்ட வரகாநதி  ஆறு 40 வருடங்களுக்கு பிறகு நிரம்பி ஓடுவதை ஒபிஎஸ் பார்த்து பழைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டாராம். அதன் பின் தேனி தனியார் திருமணமண்டபத்தில் தங்கி இருந்த கஜா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உணவு பொட்டலம்  வழங்கி அனைவரையும் சாப்பிட சொன்னார்.

 

 

அதன்பின்  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உடனடியாக நிவாரண உதவிகளும் வழங்க வேண்டும் என உடனிருந்த மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்க்கு உத்தரவிட்டு  உறுதி கூறிவிட்டு சென்றார். இப்படி திடீரென கஜாபுயல் தேனி,திண்டுக்கல்  மாவட்டத்தை  தாக்கியதால்   பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.