Skip to main content

காவலர் வாக்கி டாக்கி திருட்டு... 4 பேர் கைது!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

Police walkie talkie theft ...

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் காவல் நிலைய காவலரிடம் வாக்கி டாக்கியைத் திருடிய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மணல் திருடர்களுடன் சேர்ந்து காவலர் அன்பழகன் மது அருந்தும்போது அவரது வாக்கி டாக்கியை மர்மநபர்கள் திருடியதாக கூறப்பட்ட நிலையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில், மணல் கடத்தல் வாகனத்தை விடுவிக்கக் கோரி வாக்கி டாக்கியைத் திருடி அதை மணலில் புதைத்து வைத்தது தெரியவந்தது. வாக்கி டாக்கியைத் திருடியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது நான்கு பேரைக் கைது செய்துள்ளது காவல்துறை. நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த இன்பசுரேஷ், முகேஷ், கண்ணன் உள்ளிட்ட 4 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்