Skip to main content

கள்ளத்தனமாக 'கள்' இறக்கம்... தீவிர தேடலில் போலீசார்  

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

பனை மரத்தின் கீழே இருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்த மாதிரி என்பது பழமொழி ஆனால் உண்மையிலேயே பனைமரத்தில் கள் இறக்கி திருட்டுத்தனமாக அமோகமாக விற்பனை நடந்துதான் வருகிறது இன்னும் கிராமங்களில்.

 

Police in serious search


விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பூரிகுடிசை கிராமத்தின் அருகில் உள்ள காடுகளில் பனை மரங்கள் நிறைய உள்ளன. இதை பயன்படுத்திக் கொண்ட பலர் திருட்டுத்தனமாக பனைமரங்களில்இருந்து கள் இறக்கி அமோகவிற்பனை செய்து வந்துள்ளனர். பொதுவாக தமிழக அளவில் அரசு டாஸ்மாக் கடைகளில் விற்கும் மதுபானங்களை தவிர மற்ற அனைத்து மது வகைகளையும் தடை செய்துள்ளது. அதைப்போல பனை, தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

Police in serious search


இந்தநிலையில்தான் காவல்துறைக்கு தெரியாமல் நிறைய பனை மரங்களில் கலையம்கட்டி திருட்டுத்தனமாக கள் இறக்கி விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த விஷயம் செஞ்சி மதுவிலக்கு போலீசாருக்கு தெரிய வந்து அதையடுத்து நேற்று அதிகாலை பூரி குடிசைப் பகுதிக்கு வந்த மதுவிலக்கு போலீசார் அங்கு நிறைய மரங்களில் திருட்டுத்தனமாக கள் இறக்கப்பட்டதை கண்டு பிடித்தனர்.

 

Police in serious search


இதையடுத்து மரமேறும் தொழிலாளர்களை வரவழைத்து மரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளை உடைத்து எறிந்தனர். இப்படி திருட்டுத்தனமாக கள் இறக்கியவர்கள் போலீஸ் வருவது தெரிந்து தப்பி ஓடிவிட்டனர்.  அவர்களை பிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். பட்டப்பகலில் பனை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்த அந்த நபர்கள் பலே கில்லாடிகள் போலீஸ் கண்ணிலும் மண்ணைத் தூவி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்