Skip to main content

கொடநாடு வழக்கின் முக்கிய ஆதாரத்தை கைப்பற்றிய போலீஸ்! 

Published on 10/11/2021 | Edited on 10/11/2021

 

Police seize key evidence in Kodanad case

 

கொடநாடு கொலை வழக்கில் பல முக்கிய திருப்பங்களை கனகராஜ் குடும்பத்தின் மூலமாகவே வெளிக்கொண்டு வர போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதனால்தான் கனகராஜ் சித்தி மகன் ரமேஷின் போலீஸ் கஸ்டடியை ஒருவாரம் நீட்டித்து கேட்டது போலீஸ். நீதிபதி 5 நாட்கள் அவரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

மொத்தம் 10 நாட்கள் விசாரிக்க ரமேஷிடம் என்ன உள்ளது என போலீஸ் வட்டாரங்களில் கேட்டோம். இதில் 2 வழக்குகள் உள்ளன. ஒன்று, கொடநாடு கொள்ளை வழக்கு, இன்னொன்று கனகராஜின் மர்ம மரணம். இந்த இரண்டிலும் ரமேஷ் சம்பந்தப்பட்டுள்ளார். கனகராஜ் இறப்பதற்கு முன்பு அவருடன் ஒன்றாக இருந்த ரமேஷ், கனகராஜ் இறப்பதைப் பார்த்துள்ளார். ஆனால் மர்ம மரணம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்.

 

போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் புதிய தகவல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். கொடநாடு கொள்ளை முடிந்ததும் சேலத்துக்கு வந்த கனகராஜுக்கு ரமேஷம் தனபாலும் சேர்ந்து புதிய செல்ஃபோனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த செல்ஃபோனை கனகராஜின் மரணத்திற்குப் பிறகு ரமேஷ் வைத்திருந்துள்ளார். அதைப் போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள். கொடநாடு கொள்ளை நடந்தபிறகு புதிய செல்ஃபோனில் கனகராஜ் யாரையெல்லாம் தொடர்புகொண்டுள்ளார் என்ற எலக்ட்ரானிக் தகவல்களைப் போலீசார் திரட்டி, அதை வைத்தும் ரமேஷிடம் விசாரணையை நீட்டித்துள்ளனர்.

 

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை, அலியார் என்ற ஹவாலா ஆபரேட்டர் மீதான சந்தேகம் ஆகியவற்றுக்கும் கொடநாடு வழக்குக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாம்.

 

 

சார்ந்த செய்திகள்