Published on 10/04/2021 | Edited on 10/04/2021

தமிழ்நாட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் (08.04.2021) தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. முன்னதாக, பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகங்கள் இருந்தன.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், திட்டமிட்டபடி மே 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படும் என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகினும் இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. நேற்று பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்கான கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.