தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வு பலத்த கண்காணிப்புடன் தொடங்கியது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் 8.26 லட்சம் பேர், 6,356 தனித்தேர்வர் என 8.32 லட்சம் பேர் புதிய பாடத்திட்டத்தில் எழுதுகின்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2 படிக்கும் 50,650 பேரும் தேர்ச்சி பெறாத பாடத்துக்கு தேர்வெழுதுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதுவோருக்கு கூடுதலாக 113 மையம் என மொத்தம் 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத 3,195 பேரும் பழைய படத்தில் +1 தேர்வு எழுதுகின்றனர்.
சென்னையில் மட்டும் 411 பள்ளிகளைச் சேர்ந்த 46,779 மாணவர்கள் 159 மையங்களில் தேர்வெழுதுகின்றனர். அதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் 151 பள்ளிகளைச் சேர்ந்த 14,779 மாணவர்கள் 40 மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.
தமிழ் வழியில் பயின்று எழுதவுள்ள 4,38,988 பேருக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26- ஆம் தேதி வரை நடக்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் மே 14- ஆம் தேதி வெளியிடப்படுகின்றன.