Perarivalan Release nagapattinam congress struggle

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, நாகையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு கண்டன கோஷங்களை முழங்கினர். அப்போது பேரறிவாளன் விடுதலையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும், வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை தமிழக அரசு காக்க கூடாது என்றும், ராஜீவ் காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றம் விடுவிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment