Published on 20/10/2020 | Edited on 20/10/2020
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்... விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. 'காவிரி காப்பாளர்' பட்டம் மட்டும் போதுமா? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது முதல்வருக்குத் தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை!" என்று வலியுறுத்தியிருந்தார்.
தொடர் மழையால் நெல் நனைந்தது தொடர்பான செய்தியை மேற்கோள்காட்டி ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ் நெல் கொள்முதல் தொடர்பாக விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.