Skip to main content

ஆக்சிஜன் ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்து!

Published on 02/06/2021 | Edited on 02/06/2021

 

oxygen truck incident in namakkal district highway police investigation

 

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு 3.28 டன் திரவ ஆக்சிஜன் ஏற்றிச்சென்ற மினிலாரி நாமக்கல்லில் விபத்துக்குள்ளானது. களங்காணி தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தின் மீது ஆக்சிஜன் லாரி மோதியதில் திரவ ஆக்சிஜன் வெளியானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், ஆக்சிஜன் கசிவை சரி செய்து விபத்துக்குள்ளான மினி லாரியை மீட்டனர். 

 

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான மினி லாரி சிஜிக்கால் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்