![ordered to Teachers to come to school every day from August 2nd!](http://image.nakkheeran.in/cdn/farfuture/pkx69tJxsIT6eMuf3oVbdET46cd7s_GoQinU-wH0niY/1627578904/sites/default/files/inline-images/s1_20.jpg)
ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன நிலையில், ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை பணிகள், கல்வி தொலைக்காட்சி பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்திருந்த நிலையில் 68 நாட்களுக்கு பிறகு இன்று சற்று அதிகரித்துள்ளது. மூன்றாம் அலை வரும் என அஞ்சப்படுகின்ற நிலையில் பள்ளி கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல் பணிக்காகவும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.