Published on 01/09/2021 | Edited on 01/09/2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 63. கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
ஓபிஎஸ் - விஜயலட்சுமி தம்பதிக்கு ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பொதுவெளியில் அதிகம் அறியப்படாதிருந்த விஜயலட்சுமி, கடந்த 2017ம் ஆண்டு ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்முறையாகக் கணவரோடு பங்கேற்றார். அந்த புகைப்படமே அவரை பொதுவெளியில் காட்டிய முதலும், கடைசியுமான புகைப்படமாக அமைந்தது.