பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் குழுவினால் "உயிரி அறிவியல் ஆராய்ச்சியில் எதிர்கால வளர்ச்சி" என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முனைவர். ஆரோக்கியராஜ் செல்வராஜ் உயிரி அறிவியல் துறையில் இருக்கும் பாடப்பிரிவுகள், உயர்கல்வி வாய்ப்புகள், மேல்படிப்பிற்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை, தென்கொரியா நாட்டின் கல்வி மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார். முனைவர். ஆரோக்கியராஜ் செல்வராஜ் திருக்குறளை மேற்கோள்காட்டி அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் உரையாற்றியது சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்களின் சந்தேககங்களுக்கும் அவர் எளிமையாக விளக்கமளித்தார்.
மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி மாற்று வெளிநாடுகளில் உயர்கல்வி சார்ந்த தகவல்களை கொண்டுசேர்க்கும் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டல் குழு"வை முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ் பாராட்டினார்.
குழுவின் ஒருங்கிணைப்பாளர் சிலம்பை ஏ.ஆர். விவேக் குழுவின் நோக்கத்தையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் விளக்கிக்கூறினார். கலைவாணன் முத்தழிலன் தனது வரவேற்புரையில் குழுவின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியை முனைவர். சரவணன் கோவிந்தராஜூ தொகுத்து வழங்கினார்.