Skip to main content

13 இடங்களில் போட்டியிடும் அதிமுக... பாஜகவிற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

One seat allotted to BJP- admk  contesting 13 seats

 

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம், விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 

 

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் 13 இடங்களில் அதிமுக போட்டியிட இருக்கிறது. மீதம் உள்ள ஒரு இடம் பாஜகவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. வேலூரில் மொத்தம் உள்ள 138 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 130 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் போட்டியிட இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்