Skip to main content

கொலை வழக்கு... திமுக எம்.பிக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல்?!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

One day CBCID custody for DMK MP ?!

 

கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று வேலைக்குச் சென்ற கோவிந்தராஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மகனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

கோவிந்தராஜின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரது மகனிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கூறியுள்ளார். சந்தேகமடைந்த கோவிந்தராஜின் மகன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், கொலை வழக்காகப் பதிவுசெய்யக் கோரி, காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

 

udanpirape

 

இந்த கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர்  கடந்த 11/10/2021 அன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தின் நீதிபதி முன் ஆஜரானார். அவரை 14ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று (13.10.2021) கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிசிஐடி போலீசார் தரப்பில் திமுக எம்.பியை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி என ஓபன் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை உத்தரவாக பிறப்பிக்கப்படவில்லை. சற்றுநேரத்தில் அதற்கான உத்தரவு வரும் எனக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்