Published on 24/09/2021 | Edited on 24/09/2021
![The old man who tried to put out the fire due to the inaction of the police](http://image.nakkheeran.in/cdn/farfuture/tSnD8m6ROOLGildMix0V7Dmi6Z_nX7pDc0d4Cni3p-Q/1632483171/sites/default/files/inline-images/ty-land-dispute.jpg)
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (71). இவருக்குச் சொந்தமான 88 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துக் கொண்டதாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், திருச்சி மத்திய மண்டல காவல் துறை அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றுள்ளார். காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தித் தீக்குளிக்க முயன்றவரைப் பாதுகாப்பாக காவல்துறையினர் வேனில் அழைத்துச் சென்றனர். மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளனர்.