Skip to main content

ஓகி புயல் பாதிப்பு: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் மீன்வளத்துறை செயலாளர் ஆலோசனை!

Published on 08/12/2017 | Edited on 08/12/2017
ஓகி புயல் பாதிப்பு: ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன்
மீன்வளத்துறை செயலாளர் ஆலோசனை!


ஓகி புயல் மழையால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சனைகள், கோரிக்கைகள், புகார்களை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்ல, மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி 
ஐ.ஏ.எஸ்.சை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.

மக்கள் நாடாளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள். 2 மணி நேரம் நீடித்த அந்த சந்திப்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் தலைமையில், விஞ்ஞானி லால்மோகன், ஆன்றணி கிளாரெட், குளச்சல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜேசையா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சசி குமார், துணைத்தலைவர் ஜினோபாய், மாவட்டசெயலாளர் டோமினிக் ராஜ், மாவட்ட இணைச் செயலாளர் ஜெனித், ஜாண்சிலி பாய்,

செயலர் வசந்த லதா மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரண்டு மணிநேரம் விவாதிக்க நேரம் ஒதுக்கித் தந்த ககன்தீப்சிங் பேடி,

மக்கள் நாடாளுமன்றத்தினர் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் உறுதி தந்தார். சில கோரிக்கைகளுக்கு உடனே அதிகாரிகளின் கவணத்திற்கும் கொண்டுசென்றார். ஐ.ஏ.எஸ்.அதிகாரியிடம் மக்கள் நாடாளுமன்றத்தினர் முன் வைத்த கோரிக்கைகள்:


1. காணாமல் போன மீனவர்களின் சரியான விவரத்தை வெளியிட வேண்டும்.

2. மீனவர்களை கண்டெடுக்கும்  பணியினை கேரள அரசு எடுக்கும் முயற்சி போல் தமிழக அரசும்  செய்யவேண்டும்.
 
3. இறந்தவர்களுக்கு கேரளா அரசு வழங்கியது போல் ரூ.20 லட்சம் வழங்கவேண்டும்.
 
4. மலையோர பகுதிகளில் பாதிப்புள்ளாகிய தச்சமலை, தோட்ட மலை போன்ற இடங்களில் இன்னும் அதிகாரிகள் ஆய்வு செய்யவோ, முகாம்களில் நிவாரண உதவியோ செய்யவிலை, இதை கவனத்தில் கொண்டு செல்ப்பட்டது.

5. ரப்பர் விவசாயிகள் மீண்டுவர 7 முதல் 10 வருடங்கள் ஆகும் அவர்களுக்கு நிவாரணம் வேண்டும்.
 
6. ரப்பர் ஸ்லாட்டர் எடுத்து தொழில் செய்யும் சாதாரண மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள்து.அவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

7. ரப்பர் தொழிலாளர் கள் உள்ளிட்ட தொழில் இழந்த அனைவருக்கும் பஞ்சகால நிவாரணம் வேண்டும்.

8. வாழை, மரவள்ளிகிழங்கு, தென்னை விவசாயிகளுக்கு, ரப்பர் விவசாயிகளுக்கான நிவாரணதொகை அதிகப்படுத்தவேண்டும்.
 
9. குத்தகைக்கு நிலமெடுத்து வாழை, மரவள்ளிகிழங்கு, ரப்பர் இதர பயிர் செய்த விவ்சாயிகளுக்கு நிவாரணம் குத்தகை எடுத்தவர்களுக்கே கிடைக்க ஏற்பாடு செய்வது.

10. தேனீ வளர்ப்பு, கிராம்பு, நல்ல மிளகு போன்ற விவசாய பாதிப்புகளையும் நிவாரணப் பட்டியலில் கொண்டுவரவேண்டும்.

11. நிவாரணம் பெற மக்கள் மனுகொடுக்க அலையும் நிலையை கவனத்தில் கொண்டு செல்லப்பட்டது. கிராம அதிகாரி களத்தில் சென்று விசாரித்து பெற்றுகொள்வது. மனு கிடைக்கவில்லை என்றாலும் அதிகாரிகள் பாதிக்க்ல்ப்பட்டவர்களைச் சென்று பார்த்து நிவாரணம் வழங்க வேண்டும்.

12. சேதமடைந்த அனைத்து வகை வீடுகளுக்கும், கழிப்பறை களுக்கும், மாட்டு தொழுவம், பெட்டிகடைகளுக்கும் நிவாரணம் வேண்டும்.

13. பாதிப்புள்ளான பகுதியை புகைபடம் எடுக்கசொல்லி மீண்டும் மக்களை சிரமப்படுத்துவதை தவிர்த்து அதிகாரிகள் இடம் பார்த்து முடிவு செய்யவேண்டும்.

14. ரேசன் பொருட்கள் விநியோகம் மின்சாரமின்மையால் தடை பட்டுள்ளது. இதை தவிர்த்து மாற்று வழியில் ரேசன் பொருட்கள் உடனே வழங்கவேண்டும்.

15. குளங்கள் உடைப்பால் வயல் பகுதிகளில் மணல் நிரம்பி உள்ளதை அப்புறப்படுத்த தடை விதிக்கக் கூடாது.

16. அனைத்து நிவாரண தொகைகளையும் அகிகப்படுத்த வேண்டும்.

17. வீடுகளுக்கும் உயிருக்கும் ஆபத்தாக உள்ள மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை தேவை.

18. மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு செல்ல தடை யாக உள்ள காரணிகளை உடனே சரிசெய்ய வேண்டும் குறிப்பாக விசைப்படகு,வள்ளம், கட்டுமரம் மற்றும் மோட்டார்கள் போன்ற பொருட்களின் சேத மதிப்பீட்டின் கணக்கீட்டை உடனே துவங்க உத்தரவு இடப்பட்டது.

19. ஒகி புயலால் கடலுக்குச் செல்லாமல் இருக்கும் மீனவர்களுக்கு நிவாரணமும், வெளிமாநிலத்தில் உள்ள மீனவர்கள் இங்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20. ஒகி புயல் ஏற்பட்டதற்கான காரணத்தை விஞ்ஞான பூர்வமாக முழு ஆய்வு செய்ய வேண்டும்.

21. இது போன்று அழிவுகள் வராமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவியல் தொழிட்நுட்ப  ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

22. கணாமல் போன மீனவர்கள் பற்றி மக்கள் கூறுவதை ஏற்கவேண்டும்.

23. இன்னும் மினிணைப்பு கிராமங்களில் வந்து சேர நாட்கள் பல் ஆகும் இதை துரிதபடுத்தவேண்டும்.
 
24. மாவட்டம் முழுதும் பாதிப்பிற்க்குள்ளாகியுள்ளதால் குழந்தைகளின் சிரமங்களை கணக்கில்கொண்டு , பள்ளி காலாண்டு தேர்வை தள்ளி போடவேண்டும்.

25. பேரிடர் காலங்களில் அரசு அதிகாரகள். விடுப்பு எடுப்ப்தை அனுமதிக்ககூடாது. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மக்கள் பாராளுமன்ற குமரிமாவட்டக் குழு முன்வைத்ததுள்ளது.

- இளையர்

சார்ந்த செய்திகள்