o panneerselvam

கோவையில் ஓ.பன்னீர்செல்வம் புத்துணரவு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ஒரு வாரம் அங்கேயே தங்க உள்ளார்.

Advertisment

இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக துணை-முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இருந்து கோவை சென்றுள்ளார். கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள ஆர்.கே. இயற்கை நல மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவமனையில் புத்துணர்வு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அங்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு டாக்டர்கள் இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மருத்துவமனையிலேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெற உள்ளார்.