துணை முதல்வர் ஓபிஎஸ்-சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் ஆகிய 4 நகராட்சி அலுவலகங்களுக்கு திடீரென விசிட் அடித்த துணை முதல்வர் ஓபிஎஸ் அங்குள்ள அதிகாரிகளிடம் கரோனா காய்ச்சல் தடுப்பு பணிகள் மற்றும் சுகாதாரம், உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களிடம் விரிவாக ஆய்வு மேற்க்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நோய் தொற்று சிகிச்சை பெறுவோர், தனிமைபடுத்தப்பட்டோர், சிகிச்சை முடித்தவர்கள், கிருமிநாசினி தெளித்தல், வீடுதேடி அத்தியாவசிய பொருள் வழங்குதல், அம்மா உணவகம், குடிமை பொருள், நிவாரணம் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
அதோடு தேனி மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் எவ்வித Postive Case ம் வரவில்லை என்பது நல்ல செய்தியாகும். இந்த நல்ல செய்தி தொடர்ந்திட, மக்கள் தங்களுக்குள் கண்டிப்பும் அலுவலர்கள் மக்களிடம் கனிவுடன் கூடிய கண்டிப்பையும் கடைப்பிடித்திட வேண்டுகிறேன் என தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் கட்சிப் பொறுப்பாளர்கள் என பெரும்பாலனோர்கலந்து கொண்டனர்.