Notice of the evaluation of students' answer sheets!

Advertisment

கல்லூரி மாணவர்கள் வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக அனுப்பும் விடைத்தாள்களும், அஞ்சல் வழியாக அனுப்பும் விடைத்தாள்களும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுமென்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை இன்று (24/01/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப், மின்னஞ்சல் வாயிலாக சம்மந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

நேரடியாக எழுதப்பட்ட விடைத்தாள்களையும் கல்லூரிகளுக்கு அஞ்சல் மற்றும் கொரியர் வாயிலாக அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மாணவர்கள் எழுதும் விடைத்தாள்கள் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே மதிப்பீடு என்கிற புதிய நடைமுறை அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் உயர்கல்வித்துறை புதிய நடைமுறையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.