Skip to main content

வடகிழக்கு பருவமழை: முதல்வர் இன்று ஆலோசனை!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Northeast Monsoon- CM advises today!

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (24.09.2021) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும். 

 

வடகிழக்கு - மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூரில் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் மழையும், சேலம் ஏத்தாப்பூரில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்