Skip to main content

உண்மையை புதைத்துவிட்டு என்னை பலிகடா ஆக்கினார்கள்... நக்கீரனில் நிர்மலா பற்றிய செய்தி அனைத்தும் 100க்கு100 உண்மை... அடித்து சொல்லும் முருகன்

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 


நிர்மலாதேவி வழக்கில் கைதாகி 10 மாத சிறைக்கு பிறகு இன்று (20ம் தேதி) மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முருகன், கருப்பச்சாமியை அவர்களது மனைவி குழந்தைகளோடு வரவேற்க காத்திருந்தனர்.

 

வெளியே வந்த முருகன் நம்மிடம், “சிறை வாழ்க்கை மிக கொடிமையானது. அதாவது எந்தவித தவறும் செய்யாமல் என்னை இந்த உயர் அதிகாரிகளும், அரசியல் தலைகள் கொண்ட அதிகாரவர்க்கமும் இந்த விசயத்தில் இருந்து தப்பிக்க என்னை பலிகடா ஆக்கி சிறையில் தள்ளியது கொடுமையிலும் கொடுமை. சில நாட்கள் சிறையில் தூக்கமே வராமல் அழுது கொண்டே இருப்பேன். செஞ்சவனெல்லாம் ஹாய்யா வெளியில் இருக்கான், நம்மள இப்படி சதி பண்ணி உள்ளே தள்ளிட்டாங்களே என்று என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அந்த நாட்களில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை.

 

murugan




என் குடும்பம் நிற்கதியில் நிற்கிறது. இன்னமும் எனக்கு பயமாகதான் இருக்கிறது. சிறையிலேயே மிரட்டினார்கள். இப்போது வெளியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறேன். முகிலனை போலிஸ் கடத்தியது போல என்னையும் கடத்தமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். நிர்மலாதேவி வாயை திறந்தால் தமிழகமே ஆட்டம் காணும். எனக்கு தெரிந்து நக்கீரனில் இதுவரை வெளிவந்த அனைத்து செய்தியுமே உண்மை.  நான் சிறையில் இருக்கும் போது என்னை பார்க்க வரும்போது என் மனைவியும் உறவினர்களும் பத்திரிகைகள் கொண்டு வந்து கொடுப்பார்கள். படித்துவிட்டு திகைத்துவிடுவேன். எப்படி இவர்களால் நடந்தவைகளை அப்படியே எழுதியிருக்கிறார்கள் என்று ஆச்சரியபடுவேன்.


கொஞ்ச நாள் பொறுங்கள் இதன் பின்னனியில் இருப்பது யார்? யார்?, நிர்மலாவின் தொடர்புகள் என்ன? என்று அனைத்தையும் வெளியில் சொல்லுவேன். தற்போது வழக்கு நடப்பதால் சொல்லமுடியாமல் தவிக்கிறேன். கட்டாயம் உண்மைகள் வெளிவரும். ஆட்சி மாறும்போது காட்சிகளும் மாறும்” என்றவர் தன் குடும்த்தோடு போட்டோ எடுத்து கொள்ள நாம் கிளம்பினோம்...
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

ddd

 

 

ddd

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள். அப்போது, அடுத்த மாதம் 4 -ஆம் தேதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி காஞ்சனா, அன்றைய தினம் மூன்று மாணவிகளிடம் சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.