Skip to main content

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட துணை ஆணையர்!!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

Newly appointed Deputy Commissioner

 

கோவை மாநகரப் போக்குவரத்து துணை ஆணையராகப் பணியாற்றிவந்தவர் முத்தரசு. இவர் தற்போது, திருச்சி குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றிய வேதரத்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து திருச்சி மாநகர துணை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"போக்சோவில் கைதானவருக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" - பாஜக மாவட்ட தலைவர்

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

trichy bjp district leader statement about vinoth 

 

திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் அதிமுகவின் கட்சி உறுப்பினராக இருந்து வந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக சார்பாக, பாஜகவின் இளைஞர் அணி திருச்சி மாவட்டச் செயலாளராக கட்சி பதவி வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்தபோது அதிமுக பிரமுகர் ஒருவருடன் நட்பாக இருந்து அதன் மூலம் அவரது மகளான 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி காதலைத் தொடர்ந்துள்ளார். இதனிடையே பாஜகவில் பதவி கிடைத்தவுடன் 17 வயது சிறுமியை அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

 

இதுதொடர்பாக அந்த சிறுமி வினோத்திடம் கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திருவரங்கரம் போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். இதையடுத்து திருவரங்கம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பாஜக இளைஞரணி மாவட்டச் செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

 

இந்நிலையில் திருச்சி மாவட்ட பாஜகவின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வினோத் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருச்சி மாவட்ட பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே அவர் கடந்த டிசம்பர் மாதமே கட்சியின் இளைஞர் அணி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை" என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சிசிடிவியில் சிக்கிய முகமூடி கொள்ளையர்கள்; தேடும் பணியில் இறங்கிய போலீஸ்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Police are hunt masked robber who stole jewellery andlaptop Trichy

 

கரூரில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து ட்ராவல் பேக்கில் இருந்த 8 பவுன் நகை, லேப்டாப்பை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி பால்மடைபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் - சரண்யா தம்பதியினர் கரூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் போது நிறுத்தி வைத்திருந்த அவர்களுக்குச் சொந்தமான காரின் கண்ணாடி உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

காரில் இருந்த டிராவல் பேக்கில்  8 பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தவர்கள், போலீசாரிடம் புகார் அளித்தனர். அதனையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் நகர போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளனர்.

 

அதில், முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து  சிசிடிவி காட்சிகளின் உதவியுடன்  கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.