Published on 18/10/2021 | Edited on 18/10/2021
தமிழ்நாடு அரசு அண்மையில் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில், 'இல்லம் தேடி கல்வி' என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்திவருகிறது.
இதற்கான ஆலோசனையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கரோனா சூழலில் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க 'இல்லம் தேடி கல்வி' செயல்படுத்தப்பட இருக்கிறது. கடந்த கரோனா தளர்வுகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.