நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து, கடந்த 2015- ஆம் ஆண்டு அவர் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தின் போது, நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவருக்கும் வரும் ஜூன் 9- ஆம் தேதி அன்று திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இருவரின் திருமணமும் நடைபெறவிருப்பதாக, கூறப்படுகிறது. இதற்கான அழைப்பிதழ் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த அழைப்பிதழில் வரும் ஜூன் 9- ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.