நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனையடுத்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும்திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், நக்கீரன் ஆசிரியர் அவர்களும் பொறுப்பாசிரியர் கோவி. லெனின் அவர்களும்நேற்று (03.05.2021) திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைதெரிவித்தனர்.