கரூர் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாதத்தின் முதல் சனிக்கிழமை மற்றும் இறுதி சனிக்கிழமைகளில் 48வார்டுபகுதிகளை நான்குமண்டலங்களாகப்பிரித்து தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வுக்கு முன்பு மண்டல தலைவர்கள் மேற்பார்வையில் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சிமேயர், துணைமேயர்ஆகியோர் முன்னிலையில் ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் வீதிவீதியாகச்சென்று பொதுமக்கள் குப்பைகளை எவ்வாறுதரம் பிரித்துத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுடன் இன்று அனைத்துவார்டுபகுதிகளிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்டவாங்கபாளையம்அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்குழுக்களாகப்பிரிக்கப்பட்டு, ஒரு குழுவில் தலா 50 மாணவர்கள் என நியமிக்கப்படுகின்றனர். நான்கு மண்டல தலைவர்கள் கீழ் இந்த குழுக்கள் செயல்பட்டுமாநகராட்சியைத்தூய்மை நகரமாக உருவெடுக்க பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற என் குப்பை என் பொறுப்பு திட்டத்தின் கீழ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதியிலும் மாணவர்கள், குப்பையை எவ்வாறு தரம் பிரிக்க வேண்டும் என மாநகராட்சியின்துண்டுப்பிரசுரங்களைப்பொதுமக்களுக்கு வீடுவீடாக வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சிறப்பாக பணியாற்றிய 50 நபர்கள் உட்பட்ட குழுவில் ஒருமாணவனைத்தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ரூ.1500 மதிப்பிலான பரிசுகள்வழங்கப்பட்டுசிறப்பிக்கப்பட்டது.
கரூரில் என் குப்பை என் பொறுப்பு திட்டத்தை சில நாட்களுக்கு முன்புகாந்திகிராமஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் தொடங்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.