Skip to main content

இழந்த நேரம் திரும்ப வராது; அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது- ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்

Published on 26/07/2020 | Edited on 27/07/2020
ar rahman twit

 

அண்மையில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தி படங்களில் தனது வாய்ப்பை தடுப்பதற்காக ஒரு கூட்டமே இயங்கி வருவதாக கூறியிருந்தார். இந்த கருத்து பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு கவிஞர் வைரமுத்து, பாலிவுட்டில் பெண்மானுக்கு  கிடைக்கும் வாய்ப்புகள் போல ஆண்மானுக்கு  வாய்ப்பு கிடைப்பதில்லை என கவிதை நடையில் ஆதரவு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது  ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,  இழந்த பணத்தை மீட்டுவிடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால் இழந்த நேரம் திரும்ப வராது. அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்