Skip to main content

முருகனின் அபிஷேக வெள்ளப்பூண்டு! - பக்தர்களை ஏமாற்றும் கோவில் ஊழியர்!!

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
sdf


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஞானதண்டாயுதபாணியான முருகனுக்கு 39 உப கோவில்கள் உள்ளது. இதில் கொடைக்கானலில் உள்ள பூம்பாறை குழந்தை வேலப்பர் திருக்கோவிலும் அடங்கும். இக்கோவிலுக்கு கொடைக்கானல் சுற்றுலா வரும் பெரும்பாலானோர் இந்த பூம்பாறையில் இருக்கும் முருகனை தரிசித்து விட்டு போவதும் வழக்கம்.

அதுபோல் கோடையில் உள்ள கீழ்மலை, மேல்மழை பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களோடு சுற்றுலா பயணிகளும் வந்து போவதால் இக்கோவிலும் பிரசித்தி பெற்று வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோவிலில் பணிபுரியும் காவலாளியான காளிமுத்தோ முருகனின் தீர்த்தம் எனக்கூறி ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் குழாய் தண்ணீரை பிடித்து வைத்து கொண்டு முருகனை தரிசிப்பதற்காக வரும் முருகபக்தர்களுக்கு ஒரு லிட்டர் 200 ரூபாய் வீதம் விற்பனை செய்து வருகிறார்.
 

sda


அதேபோல் அப்பகுதியில் வெள்ளப்பூண்டு அதிகம் விளையும் பூமியாக இருப்பதால் அந்த வெள்ளப்பூண்டுகளை கட்டு கட்டாக வாங்கி வந்து முருகனின் அபிஷேக வெள்ளப்பூண்டு எனக்கூறி ஒரு கட்டு 500 ரூபாய் வரை விற்பனை செய்து வருகிறார்.

அதேபோல் முருகனுக்கு தினசரி அபிஷேகம் செய்யக்கூடிய உடைகளையும் பக்தர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என விற்பனை செய்தும் வருகிறார். இப்படி முருகனின் பெயரை சொல்லி முருகபக்தர்களை காவலாளியான காளிமுத்து ஏமாற்றி கொண்டு பகல் கொள்ளை அடித்து வருகிறார் என இந்து அறநிலைய துறைக்கும், பழனி கோவில் இணை ஆணையரான செல்வராஜ் வரை அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பியும் கூட இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் காவலாளியான காளிமுத்தும் முருக பக்தர்களை தொடர்ந்து ஏமாற்றி கொண்டு பகல் கொள்ளை அடித்து வருவதின் மூலம் லட்சாதிபதியாக உருவாகி வருகிறார்.

 

சார்ந்த செய்திகள்