
கோவை சுந்தராபுரத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையைக் கண்டித்து அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வழக்குரைஞர் சுதாகாந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தைத் தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, ''பிம்ஸ் மருத்துவமனை மீது அங்கு சிகிச்சைபெற்ற நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கரோனா காலத்தில் நோயாளிகளிடம், அரசு நிர்ணயம் செய்ததை விடப் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இறந்த நோயாளிகளின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தலையிட்டுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மூர்த்தி, தியாகு, ராவணன், அகத்தியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)