முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்எம்.ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர். விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் காட்டி கால அவகாசம் கேட்டார். இதையடுத்து கடந்த 19ஆம் தேதி எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு 2வது சம்மனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனுப்பினர். இந்நிலையில், 25ஆம் தேதி (இன்று)காலை 11 மணி அளவில் தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் ஆஜராக உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை நகரப் பிரிவுதலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mrvb-6.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mrvb-5.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mrvb-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mrvb-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mrvb-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-10/mrvb-2.jpg)