Skip to main content

50க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
peacocks are dead


மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ளது சூர்யா நகர். இதனை அடுத்த மருதங்குளம் எனும் பகுதியில் மரங்களும், கண்மாய்களும் உள்ளது. இப்பகுதியில் அதிகப்படியான மயில்கள் வசித்து வருகின்றன. இந்த மயில்களுக்கு அப்பகுதி மக்கள் தானியங்கள் வழங்கி அன்போடு வளர்த்து வந்தனர். 
 

 

 

இந்நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் அரிசியில் குருணை மருந்து கலந்து தென்னந்தோப்பிற்குள் கொட்டியுள்ளதாக கூறுப்படுகிறது. இன்று அதிகாலையில் வழக்கம்போல் பசியுடன் வந்த மயில்கள் தென்னந்தோப்புக்குள் கிடந்த விஷம் கலந்த அரிசியை சாப்பிட்டுள்ளது. இதனால்  அரிசியை சாப்பிட்ட மயில்கள், சாப்பிட்ட சில மணி நேரத்தில் மயங்கி விழுந்தன.
 

 

 

இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அதிகாரிகள் உயிருக்கு போராடிய மயில்களுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றி வருகின்றனர். எனினும் 50க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்ததால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனையடைந்தனர்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாகன சோதனையில் சிக்கிய மயில் வேட்டைக்காரர்கள்

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

three arrested in kallakurichi in peacock case

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறைக்குச் சொந்தமான ஏராளமான காப்பு காடுகள் உள்ளன. இதில், மரூர் என்ற கிராமத்தின் எல்லைப் பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் கள்ளக்குறிச்சி வனவர் முருகன் தலைமையில் வனக் காப்பாளர்கள் சதீஷ்குமார், ராம்குமார், சரவணகுமார் ஆகிய அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

 

அப்போது அந்த வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை வழிமறித்து சந்தேகத்தின் பேரில் வனத்துறையினர் சோதனை செய்தனர். அவர்களிடம் வேட்டையாடப்பட்ட மூன்று மயில்கள் இருந்துள்ளது. மருர் கிராம வனக்காட்டு பகுதியில் இதை வேட்டையாடியதாக மூவரும் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கியுடன் சென்று மயில் வேட்டையாடிய மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் ராஜ், பிரவீன் குமார், பகண்டை கிராமத்தைச் சேர்ந்த அருள் ஆனந்தராஜ் ஆகிய மூவரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 


அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூன்று பேரையும் வனவிலங்குகளை வேட்டையாடிய சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். 

 

 

Next Story

தவறை ஒப்புக்கொண்ட விவசாயிகள்... வனத்துறையினருக்குத் தகவல் அளித்த மக்கள்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

People who informed the forest department

 

கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் உள்ளது மல்லாபுரம். இந்தப் பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான காப்பு காடுகள் உள்ளன. இங்கு மயில்கள், காட்டுக்கோழிகள், மான்கள், காட்டுப் பன்றிகள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தானியங்களை சாப்பிடுவதற்காக காட்டுப்பகுதியை விட்டு ஓரம் உள்ள விவசாயிகளின் விளை நிலங்களைத் தேடி காட்டைவிட்டு வெளியே வருவது வழக்கம். அப்படி வரும் வன விலங்குகள் விவசாயிகளின் பம்புசெட்டு மோட்டார்களில் இருந்து பாய்ச்சப்படும் தண்ணீரை குடிப்பது வழக்கம்.

 

தங்களது விளை நிலங்களில் உள்ள விவசாய பயிர்களை நாசம் செய்வதாக கருதும் விவசாயிகள் குருணை மருந்து கலந்து தங்களது வயல் வெளி ஓரம் தூவி விடுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மல்லாபுரம் காப்புக்காடு பகுதி அருகில் உள்ள மக்காச்சோள வயல் அருகில் நேற்று முன்தினம் 11 மயில்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இறந்து கிடந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் அது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி வனச்சரகர் கோவிந்தராஜ் தலைமையில் வனவர்கள் முருகன், ராம்குமார், சதீஷ்குமார் ஆகிய வனத்துறையினர் மயில்கள் இறந்து கிடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றி கால்நடை மருத்துவரை வரவழைத்து அவர்களை பிரே பரிசோதனை செய்தனர்.

 

வயல் வெளி பகுதியில் கிடந்த குருணை மருந்தை தின்ற காரணத்தினால் மயில்கள் இறந்து போனதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் தர்மலிங்கம், சுப்பிரமணியன் உள்ளிட்டோரிடம் வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் 2 பேரும் தங்களது வயல் வரப்புகளில் குருணை மருந்து தூவி  வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இது சம்பந்தமாக மேலும் அவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.