தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆசிரியர்களின் கற்றல் திறன் சற்று பின்தங்கி இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான கற்றல் திறனை மேம்படுத்த ஐந்து நாள் பயிற்சி வகுப்பை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இதுவரை தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 300 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, புதிதாக பல்வேறு தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவ, மாணவிகளில் 75 ஆயிரம் பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டக் குறைப்பு குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறது. கல்வி தொலைக்காட்சிகளைத் தாண்டி மாற்று வழிகளில் மாணவர்களிடம் கல்வியைக் கொண்டு சேர்க்க புதிய திட்டங்களை வகுத்து வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.