கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மணலூர்ப்பேட்டை, அரியலூர், திருப்பாலப்பந்தல், கீழ்ப்பாடி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் அடிக்கல் நாட்டை துவக்கி வைத்தார்.
முன்னதாக, மணலூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அரசு பள்ளியில் அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றபோது அங்குள்ள தெருக்களில் மழை நீர் தேங்கியிருந்ததைக் கண்ட சட்டமன்ற உறுப்பினர், ஒப்பந்ததாரரை அழைத்து சாலையின் பல்வேறு இடங்களில் குண்டும் குழுயிமாக உள்ளது, புதிய சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் விடுத்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை ஏன் பணியை தொடங்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
அப்போது மழைக்காலம் என்பதால் பணியை தொடங்கவில்லை என ஒப்பந்ததாரர் கூறியதை அடுத்து மழை காலங்களில் ஏன் பணி செய்வதற்கு ஒப்பந்தம் விடுகிறீர்கள் என்று பேரூராட்சி மன்ற தலைவரை கடிந்து கொண்டார். இதே நிலை நீடித்தார் இந்த சாலை போடும் ஒப்பந்தம் அனைத்தையும் ரத்து செய்ய நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் உடனடியாக அந்தப் பகுதியில் சாலை அமைத்துத் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.