தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு நேற்று அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழகச் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
கரோனா விஸ்வரூபம்; சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
Advertisment