நேற்று (27-12-2021) பிற்பகல்முதல் இரவுவரை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பல்வேறு புதிய வளர்ச்சி பணிகளைத் துவங்கி வைத்தார். அந்த வகையில் ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றியம், காடுவெட்டியில் புதிய மின்மாற்றியையும், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியம், பாப்பாக்குடி ஊராட்சி மற்றும் உட்கோட்டை ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவமனை சார்பில் புதிய நல்வாழ்வு மையக்கட்டிடம் திறப்பு விழா மற்றும் மாற்றுக்கட்சியினர் கட்சியில் இணைதல் நிகழ்வில் பங்கேற்றார்.
மேலும் இடைக்கட்டு கிராமத்தில், புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ-வின் பிறந்தநாளை முன்னிட்டு, மீன்சுருட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மீன்சுருட்டி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஜெயங்கொண்டம் இறகுப்பந்தாட்ட பரிசு வழங்கும் விழா ஆகியவற்றை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன், மின்சாரத்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன், உதவி மின் பொறியாளர் பாரதிதாசன், ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் அ.பிரபாகரன், ஜெயங்கொண்டம் வட்டார மருத்துவ அலுவலர் R.மேகநாதன், கால்நடை மருத்துவர் R.ஜெயந்தி மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.