Published on 10/11/2020 | Edited on 10/11/2020
கோபிசெட்டிபாளையத்தில் இன்று பால் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கான போனஸ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசும்போது,
"நீட் தேர்வு சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வு கூடாது என்பது தான் தமிழக அரசின் முடிவு. பள்ளிகள் திறப்பு குறித்து, 45 சதவீத பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய்து, 12ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார்" என்றார்.