சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஆன்லைன் வகுப்புகளால் இனி பிரச்சினை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல ஆசிரியர்களுக்கும் களங்கம் வரக்கூடாது என்பதற்காக பாலியல் புகார் விவகாரத்தில் குழு அமைக்கப்படும். +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக முதல்வருக்கு வரைவு அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு தமிழகத்தின் கருத்துகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். ஆன்லைன் வகுப்புக்காக ஏற்கனவே உள்ள வழிமுறைகள் கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. நீட் தேர்வு தமிழகத்தில் கிடையாது; தமிழக சட்டப்பேரவைக் கூடியதும் இதற்கு தீர்வு காணப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக கடந்த ஆண்டே வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.