
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தை இன்று மாலை கூட்டியது. இந்த ஆலோசனையில் துவக்க உரையாற்றிய மு.க ஸ்டாலின், " தமிழக அரசு இந்த கரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் அதனை மதிக்காமல் வெளியே சுற்றுகிறார்கள். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கலாமா அல்லது மாற்றியமைக்கலாமா என்பது குறித்து உங்களின் ஆலோசனைகளை கூறுங்கள், அதன்படி அரசு செயல்படும்" என்றார். இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டம் நிறைவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பரமணியன், நாளை முதல் முழு ஊரடங்கை தீவிரப்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.