Skip to main content

ஈரோட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’திட்டத்தைத் துவங்கி வைத்த அமைச்சர்!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Minister launches 'Makkalai thedi Maruthuvam' project in Erode

 

ஈரோட்டில் பெரியசேமூர் தென்றல் நகரில் 24ந் தேதி மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மருத்துவ திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மருத்துவத்துறையின்  சார்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கரோனா பாதிப்பு இருந்தாலும் பொதுமக்களுக்குக் குறிப்பாக நோயாளிகளாக இருக்கக்கூடியவர்கள் பயன்படுகிற வகையிலே அவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

 

அனேகமாக இந்தியத் துணைக்கண்டத்தில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு புதிய திட்டம் இது. இதையெல்லாம் இன்றைக்கு அல்ல முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே பத்து வருட காலமாகத்  திட்டமிட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு இடத்திலும் அதற்கான வாகனத்தை ஏற்பாடு செய்து ஒவ்வொரு வாகனத்தையும் இரண்டுபேர் மூன்று பேர் சென்று வீடு வீடாக அவருக்கு யார் யாருக்கு மருந்து கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்கிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அவர்கள் போய் மருந்து கொடுப்பார்கள் இடையிலே அவர்கள் ஒரு மாதம் சென்ற பிறகு நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து அவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொண்டு மருந்துகளைப் பெற வேண்டும். ஒருவேளை பரிசோதனை அவசியம் இல்லை என்று சொன்னால்  நம்முடைய செவிலியர்களை நேரடியாக நோயாளிகள் வீட்டிற்குச் சென்று அந்த மருந்தைக் கொடுத்துவிட்டு வருவார்கள்.

 

ஒரு நோய்க்காக மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் சிரமத்தின் காரணமாக, சங்கடங்களையும் வேறு விதமான நோய்களையும் சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. அதை எல்லாம் முழுமையாக இப்பொழுது தடுக்கப்பட்டிருக்கிறது. இது நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல் வாழ்வைக் கொடுக்கிற திட்டமாக அமைகிறது. ஈரோடு மாநகரில் மட்டும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 530 மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5277 பேர் பல்வேறு இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் எனப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 182 பேர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1521 பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 532 பேர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள். மக்கள் தேடி மருத்துவத் திட்டம் மூலம் இந்த நபர்கள் முழுமையாகப் பயனடைவார்கள்” என்றார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்