தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (28/11/2021) திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் காந்தி நகரில் மழைநீர் சூழ்ந்தப் பகுதிகளையும், கோரையாற்றின் கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரினை அகற்றிடவும், கரைகளை மேலும் பலப்படுத்தி மழைநீர் உள்ளே வராத அளவிற்கு நடவடிக்கை எடுத்திடவும்,தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை கண்காணிப்புடன் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், இப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உணவை வழங்கினார். இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபூர் ரகுமான், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு மற்றும் செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.