Skip to main content

'7.5% உள்ஒதுக்கீடு... விரைந்து ஒப்புதல் தர ஆளுநர் உறுதி' - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

minister jayakumar pressmeet at rajbhavan

 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

 

அப்போது, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

 

ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை குறித்து எடுத்துரைத்தோம். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தந்தால்தான் மருத்துவக் கலந்தாய்வு நடத்த முடியும் எனவும் கூறினோம். மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆளுநர் கூறினார். 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்". இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

அதைத் தொடர்ந்து, முதல்வர் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள், 7.5% உள்ஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆளுநர் கூறியது பற்றி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விளக்கமளித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் ரூ. 35 கோடியில் வெளிவட்ட சாலைப் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்கள்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Ministers Inaugurating Outer ring road work in Chidambaram at Rs.35 crore;

சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், திருவிழா காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், அந்த பகுதிகளில் உள்ள சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவசர ஊர்திகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக போக்குவரத்தை சரி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. அதனால், அங்குள்ள பொதுமக்கள் இதனைச் சரி செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். 

அதன் அடிப்படையில், சிதம்பரம் தில்லை அம்மன் வாய்க்கால் கரையில் வெளிவட்டச் சாலை அமைக்க, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், அந்த பகுதியில் வெளிவட்ட சாலை அமைக்க ரூ. 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இன்று (12-03-24) தில்லையம்மன் ஓடை பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கும் பணியைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  தலைமை தாங்கினார். தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பணியைத் துவக்கி வைத்தனர். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், சிதம்பரம் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துகுமரன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Next Story

திமுக அமைச்சர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Dismissal of case filed against DMK ministers

 

திமுக அமைச்சர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த கே.என். நேரு, ரகுபதி, ஐ. பெரியசாமி, கோ.சி. மணி, குழந்தைவேலு ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

 

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு இரண்டாவது மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் அதிமுக அரசு செய்த முறையீட்டு வழக்கை இன்று தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.