Minister Anbil Mahesh pays homage to late police

Advertisment

திருச்சி மாவட்டத்தில் கடந்த இருபத்து ஒன்றாம் தேதி நள்ளிரவு ஆடுகளைத் திருடும் கூட்டத்தைப் பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளர் பூமிநாதனை ஆடு திருடர்கள் வெட்டிப் படுகொலை செய்தனர்.

இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளால் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டுநல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று (24.11.2021) காலை நவல்பட்டு கிராமத்தில் உள்ள பூமிநாதன் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.