நடிகரும், அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று தமிழ்நாடு அரசு சார்பில், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாள்; தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!
Advertisment