![Metro train services extended till midnight today!](http://image.nakkheeran.in/cdn/farfuture/AfBC1qq5eHbuJtIfkaeZVp61pjc4tLVl3PBW_OrgBWM/1634127679/sites/default/files/inline-images/METRO%20RAIL_2.jpg)
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (13/10/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தொடர் விடுமுறை நாட்களையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (13/10/2021) 12.00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல் மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று மட்டும் இரவு 10.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும். மேற்கண்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று மட்டுமே. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும், அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.