Skip to main content

கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட முகமூடி கும்பல்... அச்சத்தில் மக்கள்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

eeee

 

இரவு நேரத்தில் நடந்த அந்த பயங்கரமான கொள்ளை சம்பவம் சத்தியமங்கலம் பகுதி மக்களைப் பெரும் அச்சமடைய வைத்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனத்துறையில் உள்ள வனச்சரகரின் வாகன ஓட்டுனராக இருப்பவர் சஜ்ஜி என்பவர். இவர் குடும்பத்துடன் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகரில் வசித்து வருகிறார். 8 ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் அவரது வீட்டிற்குள் முகமூடி அணிந்த ஒரு கும்பல் புகுந்துள்ளது. அதில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்துள்ளார்கள்.

 

அந்த வீட்டில் தனியாக இருந்த வாகன ஓட்டுனரின் மனைவி மற்றும் அவரது மகனை அரிவாளால் வெட்டி விடுவதாக அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அப்போது அங்கிருந்து தப்பமுயன்ற வனச்சரக ஓட்டுனரின் மகனை அங்கிருந்த ஒரு நாற்காலியில் கட்டி வைத்துவிட்டு வாகனஒட்டுனரின் மனைவி ரீனாவை திடீரென அரிவாளால் தாக்கியுள்ளனர். பிறகு அவர்களது வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை முழுமையாகக் கொள்ளையடித்த அந்த கும்பல் வீட்டின் வெளியே வந்து தப்பி ஓடியுள்ளனர். 

 

eee

 

அப்போது எதிர்பாராவிதமாக அங்கு வனத்துறை ஓட்டுனர் சஜ்ஜி மற்றும் அவரது மேல் வீட்டில் குடியிருக்கும் பாலு ஆகிய இருவரும் வந்தார்கள். அந்த கொள்ளை கும்பல் இந்த இருவரையும் தலை மற்றும் பல்வேறு இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு மிக வேகமாக அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர். சினிமா காட்சி போல் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. இதை மரண பீதியில் பார்த்த அப்பகுதி மக்கள் காயம் பட்டவர்களை உடனடியாக சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

 

இதில் பலத்த காயமடைந்திருந்த வனத்துறை ஓட்டுனரின் மனைவி ரீனா மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுளார். தகவலை கேள்விப்பட்டு அந்தச் சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

திட்டமிட்ட கொள்ளையா அல்லது வேறு காரணங்களா? முகமூடி அணிந்த புதிய கும்பல் இந்தப் பகுதியில் எப்படி வந்தது என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்